வேட்டையாடு விளையாடு... ’கஸ்டடி’ பட டீசர் எப்படி இருக்கு..??

நாகசைத்தன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடித்து வரும் ‘கஸ்டடி’ படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கியுள்ளார்.
 
custody teaser

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

மாநாடு, மன்மதலீலை படங்களை தொடர்ந்து நாக சைத்தன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

naga chaitanya

இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் ‘கஸ்டடி’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘கஸ்டடி’ படத்தின் டீசர் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக நாக சைத்தன்யா நடித்துள்ளார். காட்சிகளை வைத்து பார்க்கும் போது, அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ள கஸ்டடி படம் வரும் மே 12-ம் தேதி திரைக்கு வருகிறது. 
 

From Around the web