தயவு செய்து என்னிடம் இந்த கேள்விகளை கேட்காதீங்க ப்ளீஸ் – நடிகர் ரஜினிகாந்த்..!

 
1

லைகா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருக்கு இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த படத்தில் நம்ப தலைவர் சிறப்பான தரமான கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது :

லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன் என தெரிவித்தார் .

இதையடுத்து விஜய் மற்றும் விஷால் ஆகியோரின் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் இனி என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீங்க ப்ளீஸ் என தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

From Around the web