தயவு செய்து உதவுங்கள்... வைரலாகும் அமீர் வெளியிட்ட வீடியோ..! 

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் கலக்கிவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள் அவர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அமீர். இவர் பிக் பாஸில் சீரியல் நடிகையான பாவனியை காதலித்து வந்தார். அதன்பிறகு பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடினர்.

அதில் டைட்டில் வின்னர் ஆன இவர்கள் இருவரும் காதலிப்பதாக இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பின்னர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி இனைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் அமீர் ஒரு வீடியோ இன்ஸ்டா ஸ்டோரியில் ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில், கடந்த சில வருடங்களாக இரண்டு மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வந்தேன் தன்னால் இப்போது முழுமையாக உதவி செய்ய முடியாததால் வேறு ஒருவர் மூலம் உதவிகள் செய்து வந்தேன் இப்போது அவர்களாலும் உதவி செய்ய முடியவில்லை என்கின்றனர் இது ரொம்பவும் சிரமத்தை தருகிறது.

தற்போது இரண்டு மாணவர்களின் கல்வி ரொம்பவும் கேள்விக்குறியாக இருக்கிறது என்னால் நடந்த தவறு தான்…அவர்கள் இருவருமே நன்றாக படிப்பவர்கள், தயவுசெய்து உதவுங்கள் அப்படி உதவ விரும்புபவர்கள் என்னை அணுகலாம் என வீடியோ வெளியிட்டுள்ளார்…இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது..

From Around the web