தயவு செய்து யாராவது உதவி பண்ணுங்க : நடிகர் சேஷு சிகிச்சைக்கு பணம் கேட்டு கோரிக்கை..!

 
1

நடிகர் சேஷு லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார், பின்னர் வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், பெஸ்டி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சரக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி எந்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதாம். இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கு உதவ நினைப்பவர்கள்:

கோட்டாக் மகிந்திரா வங்கி

வங்கிக் கணக்கு எண் : 9412025212

ஐஎப்எஸ்சி கோடு: KKBK0000431

சேமிப்பு கணக்கு பெயர் : எல் பாரத்

என்ற வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணம் போடலாம்.

நடிகர் சேஷு தற்போது ICU-வில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE.சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ICU-வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். மேலும், சேஷுவின் மகன் பெயருக்கு பணம் அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், வங்கி கணக்கு எண் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.


 

From Around the web