லியோ படக்குழுவினர் மீது போலீசில் புகார்..!

 
1

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக நிலவி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், டிரெய்லர் வெளியானது.

இந்நிலையில் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும், டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From Around the web