போங்கடா நீங்களும் உங்க சீரியலும் கிளம்பி போயிடலாம்னு இருக்கும் - மனம் திறந்து பேசிய பாக்கியலட்சுமி கோபி..!

 
1
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  சதீஷ்.இவர் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் சிறு வயதிலேயே அம்மா அப்பாவை இழந்து விட்டதாகவும் பாட்டி அத்தை தான் தன்னை வளர்த்ததாகவும் தற்போது தன்னுடைய மனைவியால் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதற்கான காரணம் குறித்து சதீஷ் விளக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நானும் உங்கள மாதிரி மனுஷன் தான் எனக்குள்ளவும் வருத்தம் வேதனைகள் இருக்கும்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக டைவர்ஸ் செய்த பாக்யாவை எவ்வளவு கொடுமைப்படுத்துகிறேன். மொள்ளமாரி முடிச்சு வைக்குத்தனம் என எல்லாத்தையும் செய்றேன் இதெல்லாம் புடிச்சு தான் செய்றேன்னு நினைச்சீங்களா நிச்சயமா இல்ல ரொம்ப கசப்பான விஷயம்.

நிறைய முறை போங்கடா நீங்களும் உங்க சீரியலும் கிளம்பி போயிடலாம்னு இருக்கும், கிளம்பி போய் கூட இருக்கேன் என தெரிவித்துள்ளார்.

From Around the web