பொங்கல் ரேஸில் வின்னரான மதகஜராஜா? விமர்சனம் இதோ..

 
1
2013 ஆம் ஆண்டு மதகஜ ராஜா எடுத்து முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருந்த போதும் நிதி பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம், எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இறுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மதகஜராஜா படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த ரசிகர்கள் படம் பற்றிய விமர்சனங்களை தமது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அதன்படி இந்த படம் எவ்வாறு அமைந்தது என்பதை பார்ப்போம்.

இதில் முதலாவதாக வலைப்பேச்சு அந்தணன் தனது எக்ஸ் தள  பக்கத்தில், கலகல ராஜா..! பிரித்து மேஞ்சிட்டாங்க சந்தானமும் மனோபாலாவும்.. என தனது பாசிட்டி விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

மேலும் மதகஜ ராஜா திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படமாக காணப்படுகின்றது. இப்படி ஒரு படத்தை கொடுத்த சுந்தர். சிக்கு நன்றி. விஷால், சந்தானத்தின் காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக உள்ளது. மொத்தத்தில் இந்த படம் முரட்டு FUN_ க உள்ளது என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இன்னும் ஒரு ரசிகர் புரட்சி பண்ணுறேன், சாதி படம் எடுக்கிறேன், கஞ்சா, போதை, இரத்தம் என்று நம்மள போட்டுக் கொன்றது போதும்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மிஸ் பண்ணின எல்லாம் கிடைச்ச மாதிரி ஒரு பீல்.. கட்டாயமா குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம்  என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மதகஜராஜா படம் பொங்கலுக்கு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாக உள்ளது. ஒரு சீன் கூட 12 வருடம் ஆனது போல தெரியல. விஜய் ஆண்டனி பாடல், சந்தானத்தின் காமெடி, விஷாலின் பஞ்ச் டயலாக், ஹீரோயின்களின் கிளாமர் என அனைத்துமே ஒர்க் அவுட் ஆகி உள்ளது இது பொங்கல் வின்னர் என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு தற்போது மதகஜராஜா படத்திற்கான பாசிட்டி விமர்சனங்கள் இணையதள பக்கங்களில் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

From Around the web