விரைவில் சத்தியமங்கலத்தில் கால்பதிக்கும் பொன்னியின் செல்வன்..!

 
பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்து வரும் இடம் மற்றும் அதுகுறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பிரமாண்டமாக உருவாகி படம் பொன்னியின் செல்வன் பட்பபிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே முக்கிய நடிகர்களின் காட்சிகள் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து முடிக்கப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன. இந்த தகவலை அவர்களும் சமூகவலைதளங்களில் உறுதி செய்திருந்தனர்.

தற்போது கார்த்தி, த்ரிஷா, ஜெயராம் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் மகேஸ்வர் நகரில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து சென்னை திரும்பும் படக்குழு அடுத்தடுத்தாக கோயம்புத்தூர் மாவட்ட சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறுகிறது. அதனுடன் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web