தொடர்ந்து லீக்காகும் பொன்னியின் செல்வன் காட்சிகள்... உச்சக்கட்ட டென்ஷனில் மணிரத்னம்!

 
1

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க உருவாக்கி வருகிறார்.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு,  சமீபத்தில் நிறைவடைந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் 18-ம் தேதி,  படப்பிடிப்பிற்காக மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனர். அங்கு நிறைய கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த ஒர்ச்சா பகுதியில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் தற்போது கார்த்தி, த்ரிஷா சமந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முக்கியான காட்சியான பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது படப்பிடிப்பில் புகைப்படங்கள் சிலது சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனைக் கண்ட பொன்னியின் செல்வன் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இயக்குநர் மணிரத்னம், தொடர்ந்து படத்தின் புகைப்படங்கள் வெளியாகுவதால், அவர் கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

மணிரத்னம் படப்பிடிப்பின் போது அதிக பாதுகாப்புடன் இருந்த போதிலும் தொடர்சியாக இந்த சம்பவம் நடைபெறுகிறது. மேலும் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

From Around the web