மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு..?

 
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்திற்கு இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பே பாக்கியுள்ள நிலையில், அது எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தாண்டு துவக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், கொரோனா பிரச்னையால் தாமதமாகியுள்ளது.  தொடர்ந்து இரண்டாவது அலையின் போதும் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நின்றுபோயுள்ளன. அதை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை.

இந்நிலையில் நவாரஸா படத்துக்கான விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது யூ -ட்யூப் நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இன்னும் ஒரே கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. அதை சீக்கரமே முடிப்போம் என்று அவர் கூறினார்.

அதன்படி விரைவில் இதற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கும் என்று தெரிகிறது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web