பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!

 
பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கதாநாயகன்களாக நடிக்கின்றனர். அவர்களுடன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மொத்தம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக பொன்னியின் செல்வன் தயாராகி வருகிறது. ரூ. 200 கோடி செலவில் தயாராகும் இந்த படம் கொரோனா காலத்தில் துவங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டது. கடைசியாக ஏப்ரல் இறுது வாரம் வரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது.

இரண்டாம் அலை துவங்கியதை அடுத்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு புதுச்சேரியில் பொன்னியின் செல்வன் பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். இதனுடைய முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய், சரத்குமார், கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
 

From Around the web