பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை ஜெய்பூர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் படமாக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் அதற்குள் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதாக உள்ளது. இதன்காரணமாக  நடப்பு மாதத்தில் தொடங்கவிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள படக்குழு, பொன்னியின் செல்வன் படத்திற்காக மீதமுள்ள காட்சிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதேவேளையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web