சரித்திரப் புகழ்பெற்ற நகரத்தில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்- த்ரிஷா அப்டேட்..!

 
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் இடம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் ஒரே மூச்சாக ஹைதராபாத் மற்றும் கோதாவரி மாவட்டங்களில் நடைபெற்று முடிக்கப்பட்டது. தற்போது மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு வட இந்தியப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்தில் நடக்கிறது. இதில் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உர்ச்சா என்கிற சரித்திரப் புகழ்பெற்ற நகரத்தில் ஷூட்டிங் நடக்கிறது.

அங்குள்ள கோயிலில் காட்சிகள் படமாக்கப்படும் போது, அந்த கட்டிடத்தின் புகைப்படத்தை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்லார். மேலும் தெருவோரக் கடைகளிலும் அவர் ஷாப்பிங் சென்ற வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web