உலகளவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ. 300 கோடி வசூல்..!!

பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலக அளவில் இதுவரை பெற்ற வசூல் நிலவரங்கள் குறித்து லைக்கா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் தான் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மற்ற மொழிகளில் இந்த படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விடவும், அதனுடைய இரண்டாவது பாகத்தின் வசூல் சிறியளவில் சரிவை கண்டுள்ளது. அதன்படி பி.எஸ்-2 படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ. 250 கோடி வசூல் புரிந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது.


தற்போது இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை பிஎஸ் 2 திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியளவில் மட்டும் இப்படம் ரூ. 150 கோடியை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

From Around the web