இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்க்கவில்லை: பார்த்திபன்..!!

நான் இன்னும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமே பார்க்கவில்லை என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளது  பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 
parthiban

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் ஆரம்பித்த புதிதில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானது பார்த்திபன் தான். ஆனால் அப்போது அவர் ‘இரவில் நிழல்’ தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்ததால், நடிக்க முடியாமல் போனது. 

ஆனால் மணிரத்னம் அவரை மீண்டும் கிஷோர் நடித்த ரவிதாசன் கதாபாத்திரத்துக்காக அழைத்தார். அப்போது தேதிகள் ஒத்துவராததால் நடிக்க முடியாமல் போனது. இறுதியில் அவருக்கு சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரம் வழங்கப்பட்டு, அதில் நடித்து முடித்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. இதனுடைய டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன், தான் இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

தஞ்சாவூருக்கு சென்று முதல் பாகத்தை பார்க்க விரும்பினேன். அங்கே சென்ற போது கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். அதனால் படத்தை பார்க்க முடியாமல் போனது. முதல் பாகத்தில் என்ன இருந்தது என்று தெரியாது, இரண்டாவது பாகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று தெரியாது. என்னைப்போன்ற ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தில் இருப்பதே பெருமை தான் என்று பார்த்திபன் தெரிவித்தார்.

From Around the web