பொன்னியின் செல்வனுக்கு ஆந்தமா..!! இது எப்போ நடந்தது...??

விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதை அடுத்து, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அப்டேட்டுகள் படம் குறித்து வெளியாகி வருகிறது.
 
ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. இதனுடைய முதல் பாகம் மிகப்பெரியளவில் வெற்றி அடைந்த நிலையில், பி.எஸ்- 2 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து படத்தின் பாடல்களில் ல்ரிக் வீடியோ ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இது 4 டி.எக்ஸ் என்கிற தொழில்நுட்பத்தில் வெளிவரவுள்ளது. 

ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆந்தம் பாடல் தயாராகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த பாடல் வரும் 15-ம் தேதி மாலை 7 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது.


இதற்கான போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் அந்த பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளதாக தெரிகிறது. மணிரத்னத்தின் சில முந்தையப் படங்களுக்கு இதுபோல ஆந்தம் பாடல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web