வெளியான 5 நாட்களில் இவ்வளவு கோடியா..?? பரபரக்கும் பி.எஸ்-2 வசூல்..!!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் தான் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மற்ற மொழிகளில் இந்த படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விடவும், அதனுடைய இரண்டாவது பாகத்தின் வசூல் சிறியளவில் சரிவை கண்டுள்ளது. அதன்படி பி.எஸ்-2 படம் ரிலீஸான 5 நாட்கஈல் மொத்தம் ரூ. 250 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த படம் ரூ. 11 கோடி வரை நெட் லாபம் ஈட்டியுள்ளது. அதன்படி உள்நாட்டில் இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ. 114.74 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அமெரிக்காவில் இந்த படம் 5 நாட்களில் 3.5 மில்லியன் டாலர், அதாவது ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளது.
அதேபோன்று இங்கிலாந்து உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மேலும் சில கோடிகள் என, உலகளவில் இந்த படம் ரூ. 200 கோடி வசூலை வெறும் 5 நாட்களில் கடந்துள்ளது. முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும், இந்த வசூல் சாதனை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என பாக்ஸ் அஃபிஸில் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.