பொன்னியின் செல்வன் 2-வில் நடித்த ‘மாதுளி’ யாரென்று தெரியுமா..??
 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக, அந்த படத்தில் நடித்துள்ள புதுமுகங்களின் தரவுகளை ஆராய்வதில் ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
 
shreema

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. எனினும் அந்த படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் தோன்று நடிகர், நடிகைகள் மீது ரசிகர்களுக்கு கவனம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுடைய பின்னணித் தகவல்களை ஆராய்வதில் அவர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

சிறு வயது குந்தவையாக நடித்த சிறுமி நிலாவின் பின்னணி விபரம் வெளியாகி பலரையும் ஆச்சரியமடையச் செய்தது. அவர் இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி மற்றும் நடிகை கன்யா பாரதி தம்பதியினரின் மகள் என்று தெரிந்ததும், பலரும் வாயடைத்துப் போயினர்.

அதேபோன்று பொன்னியின் செல்வன் 2 படத்தில் ராஷ்ட்ரகூட மன்னன் கோதிக்கனின் மகள் மாதுளியின் விபரங்களை பலரும் தேடி வந்தனர். தற்போது அவரது விபரங்கள் தெரியவந்துள்ளது. மாதுளியாக நடித்தவரின் இயற்பெயர் ஸ்ரீமா உபாத்யாயா ஆகும். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். தேர்ந்த நடனக்கலைஞராகவும் உள்ளார்.

நீச்சல், குதிரையேற்றம், போட்டோகிராஃபி போன்ற பல்வேறு பொழுதுப்போக்குகள் இவருக்கு உள்ளன. இப்போதைக்கு ’மாதுளி’ ஸ்ரீமா உபாத்யா குறித்து இவ்வளவு தான் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு விபரங்கள், தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்போம். 
 

From Around the web