என்ன சொல்றீங்க? அதற்குள் ஓ.டி.டி-க்கு வரும் பொன்னியின் செல்வன் 2..!!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கினார். இதனுடைய முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. பாகுபலி படத்துக்கு இணையான எதிர்பார்ப்புடன் ரிலீஸான இந்த படம், தமிழைத் தவிர மற்ற மொழிகளில் தோல்வி அடைந்தது.
ஆனால் தமிழில் இந்த படத்துக்கு ஏகோபித்த ஆதரவு எழுந்தது. இதனால் உலகளவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ. 500 கோடி வரை வசூல் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது. எனினும் முதல் பாகத்துக்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மற்ற மொழிகளில் இதற்கான வரவேற்பு மிகவும் குறைவாகவே இருந்தது. தமிழில் மட்டும் வழக்கமான ரசிகர் கூட்டம் இருந்தது.
இந்நிலையில் பிஎஸ்-2 படம் வெளியாகி 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், அந்த படம் வரும் 26-ம் தேதி ஓ.டி.டி-யில் வெளியாகிறது. அமேசான் பிரைமில் வெளியாகும் இந்த படத்தை முதல் சில நாட்கள் கட்டணம் செலுத்தி தான் பார்க்க வேண்டும். ஜூன் 2-ம் தேதி முதல் ஓ.டி.டி கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லோரும் சாதாரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்கலாம்.
முதல் பாகம் வெளியான போது, தமிழில் மட்டுமே வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த படம் ஓ.டி.டி-யில் வெளியானதை அடுத்து பல பார்வையாளர்கள் பிஎஸ் 1 படத்தை பாராட்டினர். அதே வரவேர்பு பிஎஸ் 2 திரைப்படம் ஓ.டி.டியில் வெளியான பின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.