”வீர சோழம் மண் மணக்கும்” வெளியானது பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர்..!!

சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன.
 
ponniyin selvan 2

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கியுள்ளார். அதில் முதல் பாகம், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இந்த படம் ஒட்டுமொத்தமாக ரூ. 700 கோடி வசூல் சாதனை புரிந்தது.

அவற்றில் தமிழில் மட்டும் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக, படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் அறிவித்தது. முதல் பாகத்தில் அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் கடலில் மூழ்கிவிட்ட காட்சியின் நிறைவுபெற்றது. இரண்டாவது பாகத்தில் அவர்கள் உயிர் பிழைத்து, சோழப் பேரரசை காக்க போராடுவது போன்று திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ள பி.எஸ்- 2 படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அவர்களுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர்கள் இளங்கோ கிருஷ்ணன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சுமார் 3.23 நிமிடம் ஓடும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த திரைப்பட ஆர்வலர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. 

From Around the web