விரைவில் பிஎஸ்-2 டிரெய்லர்- ஏன் இந்த போஸ்டர் தெரியுமா..??

தமிழ் சினிமா ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
 
ponniyin selvan 2

மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழில் பெரியளவில் ஹிட்டானது. இதனுடைய தமிழ் பதிப்புக்கான வசூல் மட்டும் ரூ. 500 கோடியாகும். ஆனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சுமாராகவே இப்படம் ஓடியது. 

மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தோல்வியை தழுவியது. எனினும் இதனுடைய இரண்டாம் பாகத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக மார்ச் 29-ம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


அதற்காக முதலில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரம் தனக்கு கீழே கிடக்கும் ஒரு வாளை கையில் எடுப்பது போன்று ஒரு படம் உள்ளது. அதற்கு மேலே விக்ரம் கண்களை கீழே பார்ப்பது போன்ற புகைப்படம் பெரியதாக உள்ளது. 

பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனும் நந்தினியும் ஒரே ஒரு காட்சியில் தான் சந்திப்பார்கள். அப்போது ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துவதிகளால் கொல்லப்படுவார். அந்த காட்சி இடம்பெற்றுள்ள புகைப்படம் போஸ்டரில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த காட்சி பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடைவேளை காட்சியாக அமையவுள்ளது. வரும் 29-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஏற்கனவே பிஎஸ் 2 பட டிரெய்லர் 3.25 நிமிடங்கள் ஓடும் என்கிற தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

From Around the web