கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழு..!

 
பொன்னியின் செல்வன் படக்குழு
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதிகளிலும், சத்தியமங்கலம் காடுகளிலும் ஷூட்டிங் நடைபெறுகிறது. அதையடுத்து ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் சில அழகிய காட்சிகளை எடுக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வட இந்தியப் பகுதிகளில் ஷுட்டிங்க் முடித்துக்கொண்ட படக்குழு, தற்போது சிறிய ஓய்வில் உள்ளது. அதை தொடர்ந்து மேலே கூறப்பட்டுள்ள இடங்களிலும் ஷூட்டிங் நடக்கிறது. நடிகர் கார்த்தி தொடர்பான காட்சிகள் இங்கு எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் ஷூட்டிங் முடித்தவுடன், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்குமான படப்பிடிப்பு நிறைவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடத்தப்பட்டு படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web