அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் ‘பொன்னியின் செல்வன்’..!

 
பொன்னியின் செல்வன்

ஹைதரபாத்தில் நடைபெற்று வந்த ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று வந்தனர்.

தற்போது இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகிறது. அதை தொடர்ந்து சில நாட்கள் காத்திருப்புக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அங்கு இம்மாதம் இறுதுவரை ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் பொன்னியின் செல்வன் பட போஸ்டர் வெளியானது. அதில் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web