பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமணம்..!!

 
பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர்களாக இருக்கும் பொன்வண்ணன் மற்றும் சரண்யா ஆகியோருடைய மூத்த மகள் ப்ரியதர்ஷினியின் திருமண வரவேற்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பசும்பொன் படத்தில் இணைந்து நடித்த போது பொன்வண்ணன் மற்றும் சரண்யாவுக்கு இடையில் காதல் பிறந்தது. அதை தொடர்ந்து சிறிது நாட்களிலேயே பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை தொடர்ந்து நடிகை சரண்யா படங்களில் நடிப்பதை தவிர்த்தார். பொன்வண்ணன் சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவும் ரீஎண்ட்ரி கொடுத்தார் சரண்யா. அதன்மூலம் பல்வேறு படங்களில் நடித்தார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திர அம்மா நடிகையாக திகழும் சரண்யா மற்றும் பொன்வண்ணன் ஆகியோருடைய மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் நிகழ்வில் பங்கேற்றார். நடிகை சரண்யா, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு நெருங்கிய தோழி ஆவார். மேலும் ஓகே ஓகே உள்ளிட்ட பல படங்களில் உதயநிதியுடன் அவர் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web