மீண்டும் வலிமை படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்- ஆடிப்போன போனி..!
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியளவில் தமிழ்நாட்டு ரசிகர்கள் செய்த டிரெண்டிங்கை விட, தேசியளவில் பல்வேறு மொழி பேசும் ரசிகர்கள் வலிமை படத்தை மீண்டும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தி அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. ஒருவழியாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
மேலும் படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகவலைதளத்தில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூருக்கு புதிய கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
அதன்படி அஜித் நடித்துள்ள வலிமை படத்தை இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். அந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்த பிறகு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த கோரிக்கையை போனி கபூர் பரிசீலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தி பேசும் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, #WeWantValimaiInHindi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். தற்போது வரை 28 ஆயிரம் ட்வீட்டுகளுக்கு மேல் இந்த ஹேஷ்டேக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 - cini express.jpg)