ஒருவழியாக வெளியானது பொன்னியின் செல்வன் வெப் சிரீஸ் அப்டேட்..!

 
சவுந்தர்யா ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் வெப் சிரீஸின் முதல் சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு எம்.எக்ஸ் பிளேயருடன் இணைந்து தமிழில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை வெப் சிரீஸாக உருவாக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கினார். இதற்கான டைட்டில் மோஷன் வீடியோவும் வெளியிடப்பட்டது.

ஆனால் அதை தொடர்ந்து சிரீஸ் குறித்த எந்தவிதமான தகவலும் வெளிவரவில்லை. அதற்குள் மணிரத்னம் இந்த நாவலை திரைப்படமாக்கும் பணிகளை தொடங்கினார். கொரோனா பரவல், படப்பிடிப்பு நடத்த கட்டுப்பாடுகள் என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இரண்டு பாகங்களுக்குமான ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அடுத்த மாதம் முதல் இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் வெப்சிரீஸ் தொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முதல் சீசனுக்கான கதை புதுவெள்ளம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவுடன் சிரீஸ் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தும் படங்களும் ட்விட்டரில் உள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் கோச்சடையான் படம் போல இதை சவுந்தர்யா கையாண்டுவிடக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

From Around the web