கொரோனா காலத்தில் நூறு குடும்பங்களுக்கு உதவும் பூஜா ஹெக்டே..!

 
கொரோனா நிவாரணப் பணியில் பூஜா ஹெக்டே

கொரோனா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கையை இழந்து வருமானமில்லாமல் தவித்து வரும் 100 குடும்பங்களுக்கு உதவுவதற்கான செயல்பாடுகளை துவங்கியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று நலம்பெற்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே தற்போது சமூகக் கடமை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கொரோனா ஊரடங்கினால் வேலையில்லாமல் கஷ்டப்படும் 100 குடும்பங்களுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார்.

அதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை ஏற்பாடு செய்து 100 குடும்பங்களுக்கு தருவதற்கான நடவடிக்கைகளை பூஜா ஹெக்டே துவங்கியுள்ளார். இதற்காக பேக்கிங் செய்யும் அவருடைய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

நடிகை பூஜா மட்டுமில்லாமல் பல்வேறு நடிகர் நடிகைகளும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிவி பிரபலங்கள் முதல் சமூகவலைதள பிரபலங்கள் என பலரும் உதவிப்படக்கூடிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.
 

From Around the web