அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே..?
நடிகர் விஜய்யுடன் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே அடுத்ததாக சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘முகமூடி’. அதில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே, பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘தளபதி 65’ படத்தின் விஜய்க்கு கதாநாயகியாக அவர் நடிக்கிறார்.
இந்த படத்தை அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்திலும், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார்.
அதை தொடர்ந்து தயாராகும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
 - cini express.jpg)