மகேஷ் பாபு படத்தில் இருந்து வெளியேறிய பூஜா ஹெக்டே..!!
மகேஷ் பாபு நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இப்படம் சராசரியான வெற்றியை பதிவு செய்தது. தற்போது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். எஸ். ராதாகிருஷ்ணா என்பவர் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
முன்னதாக இந்த படத்தில் நடிப்பதற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்றொரு நாயகியாக ஸ்ரீலீலா என்பவர் நடித்து வருகிறார். ஆனால் அறிவிக்கப்பட்ட நாளில் ஷூட்டிங் துவங்கப்படாமல், தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. மேலும் கதையிலும் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களை விடவும், இந்திப் படங்களில் நடிப்பதற்கு தான் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அதன்காரணமாகவே அவர் ‘குண்டூர் கிராமம்’ படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ படங்களில் நடித்த சம்யுக்தாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குண்டூர் கிராமம் படத்துக்கு எஸ்.எஸ். தமன் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவரை சமீபத்தில் படக்குழு நீக்கியது குறிப்பிடத்தக்கது.