பீஸ்ட் படத்தை முடித்து ஊர் திரும்பினார் பூஜா ஹெக்டே..!

 
பூஜா ஹெக்டே

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தனக்கான காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே சென்னையில் ஷூட்டிங் முடித்துக் கொண்டு மும்பை திரும்பியுள்ளார். அதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஏற்கனவே பீஸ்ட் படம் இந்தாண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுவிட்டது. தற்போது ஷூட்டிங் வெகு விமர்சையாகவும் வேகமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது, திட்டமிடப்பட்டதற்கு முன்னதாக இப்படம் முடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web