அந்த நடிகருடன் நடிக்காததற்கு காரணம் இதுதான்: பூஜா ஹெக்டே பளீச்..!!
மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, பூஜா ஹெக்டே நேரடியாக தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தெலுங்கு சினிமாவில் கால்பதித்து பெரியளவில் வலம் வரத் தொடங்கினார். அங்கு ஒருசில ஆண்டுகளில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
அதையடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்தார். ஆனால் தெலுங்கு சினிமாவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் தமிழ் மற்றும் இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். எதிர்பாராதவிதமாக அந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக பூஜா ஹெக்டே அறிவித்தார். இதுதொடர்பான காரணம் எதுவும் தெரியாமல் இருந்தது. எனினும் மகேஷ் பாபு படத்தில் இருந்து அவர் விலகியது தெலுங்கு சினிமாவில் பரபரப்பானது.
இந்நிலையில் குண்டூர் காரம் படத்தில் இருந்து விலகியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் பூஜா ஹெக்டே. அதன்படி, குண்டூர் காரம் படத்தில் ஒப்பந்தமானது உண்மை தான். ஆனால் அப்படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு தாமதமாகி வந்தது. இதனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே குண்டூர் காரம் படத்தில் நான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.