அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே..!

 
பூஜா ஹெக்டே

தனுஷ் புதியதாக நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை தொடர்ந்து அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்திலும் பவன் கல்யாண் நடிக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் வெங்கி அட்லூரி தனுஷை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மாளவிகா மோகனனை தன்னுடைய டி 43 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேருகிறார் தனுஷ்.
 

From Around the web