விஜய்யுடன் இணைந்த ராசி- மற்றொரு முக்கிய நடிகர் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!

 
விஜய்யுடன் இணைந்த ராசி- மற்றொரு முக்கிய நடிகர் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!

முகமூடி படத்தில் நடித்து ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிப்பதை அடுத்து, அவரை தமிழின் முன்னணி நடிகர்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே அதை தொடர்ந்து இந்திக்கு போனார். தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு படங்கள் அவருக்கு தோல்வியை தழுவின. தெலுங்கிலும் அவருக்கு ஆரம்பத்தில் சறுக்கல்களே அமைந்தன. ஆனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு உருவானது.

அதனால் டாலிவுட்டில் நிரந்தரமாக கால்பதிக்க ஆயத்தமானார். மெல்ல மெல்ல பூஜாவின் படங்கள் பிக்-அப் ஆக தொடங்கின. அதை தொடர்ந்து தற்போது அவர் தெலுங்கில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நாயகியாக உள்ளார். அந்தவகையில் கடைசியாக வெளியான அலவைகுண்டபுரம்லோ படம் வசூலை வாரி குவித்தது.

இதன்மூலம் இந்தியளவில் உருவாகும் தென்னிந்திய படங்களில் அவர் வரிசையாக ஒப்பந்தமானார். பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா, இந்தியின் ரன்வீர் சிங் நடிக்கும் சர்கஸ் ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவை அனைத்தும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் மார்கட்டையும் குறிவைத்து உருவாக்கப்பட்டு வரும் படங்களாகும்.

இந்த வரிசையில் விஜய்யின் 65 வது படமான ‘தளபதி 65’ படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பூஜா. சினிமாவில் முதன்முதலாக தனக்கு வாய்ப்பளித்தது தமிழ் திரையுலகம் தான் என்கிற நன்றியுடன், விஜய் பட வாய்ப்பு வந்ததுமே அவர் ஓகே சொல்லிவிட்டார். 

ஆனால் அவருடைய நல்ல மனதா அல்லது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ராசியா என்று தெரியவில்லை, அடுத்ததாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படம் முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், அவ்வப்போது இந்தியிலும் நடித்து வந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு மிகவும் பிடித்தது தமிழ் சினிமாதானாம். தமிழில் முத்திரை பதித்துவிட்டால் இந்தியா முழுக்க பிரபல திரையுலகுகளில் ஒரு ரவுண்டு வரலாம் என்பது பூஜாவின் திட்டமாம். கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பூஜா ஹெக்டே சிறந்த உதாரணம். 
 

From Around the web