பூனம் பாஜ்வா புகைப்படங்களுக்கு குவியும் கண்டனங்கள்..!

 
1

தமிழில் பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.அதன் பின்னர் ’தெனாவெட்டு’ ‘கச்சேரி ஆரம்பம்’ ’ஆம்பள’ ’அரண்மனை 2’ ’முத்தின கத்திரிக்காய்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சில மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் அதில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன் பூனம் மிகக்குறைந்த ஆடைகளை அணிந்து பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை டெல்ஸா என்று கிண்டல் செய்து வருவதுடன் ’இதெல்லாம் ஒரு பிழைப்பா’ என்று கண்டனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் அவருடைய அழகை பாராட்டி ஏகப்பட்ட கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு இந்த போட்டோஷூட் புகைப்படத்திற்கு பின்னராவது வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web