பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக களமிறங்கும் பிரபல நடிகர்..!
 

 
அசீம்

பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த அருண் விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சீரியல் நடிகர் அசீம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பாராதவிதமாக அதில் ஹீரோவாக நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனால் அவருக்கு பதிலாக சீரியலில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்த அசீம் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த சீரியலில் கதாநாயகனின் கதாபாத்திரம் நெகட்டிவ் ரோல் கலந்த கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் என இரண்டும் இருந்து வந்தது. தற்போது அசீம் நடிக்கவுள்ள செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web