பூவே உனக்காக சீரியல் கதாநாயகன் திடீர் விலகல்..!

 
நடிகர் அருண்

சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலின் கதாநாயகன் அருண் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறி சமூகவலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘பூவே உனக்காக’. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் அருண். தொடரின் கதாநாயகன் மட்டுமில்லாமல் வில்லனும் அவர் தான்.

தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்து வந்த அவர், பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு செய்துள்ளார். எதற்கான அந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறித்து நடிகர் அருண் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பூவே உனக்காக சீரியலில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் சன் டிவிக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி.

விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன். நான் சீரியலில் இருந்து விலகுவதை நினைத்து யாரும் கவலைய அடைய வேண்டாம். மீண்டும் உங்களை விரைவில் சந்திப்பேன். எப்போது உங்களுடைய ஆதரவு மற்றும் உறுதுணையை விரும்பும் நடிகர் அருண் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

From Around the web