பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கு விரைவில் டும் டும் டும்..?

 
1

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சைதன்யாவின் ஜோடியாக நடித்து திரை உலகில் களமிறங்கியவர் தான் பிரபல நடிகை சமந்தா.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்…ஆனால் அதன் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தது குறிப்பிடத்தக்கது அது பலருக்கும் அதிர்ச்சி தந்தது.

இந்த சூழல் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாவுடன் காதலில் உள்ளார் என்றும், தன்னுடைய புது வீட்டிற்கு அவரை அழைத்து தனது பெற்றோரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது..

அது பல மாதங்களாக நடந்து வருகிறதாம் ஆனால் இந்த தகவலை நாக சைதன்யாவும், அவருடைய குடும்பத்தாரும் மறுத்துள்ள நிலையில் இந்த செய்தி தற்பொழுது தெலுங்கு திரை உலகை தீயாக பரவி வருகிறது.விரைவில் சோபிதாவுடன் திருமணம் என தகவல் மீண்டும் வர துவங்கியுள்ளது..

From Around the web