கணவர் மீது குடும்ப வன்முறை புகார்- பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

 
கணவருடன் அம்பலிதேவி

கணவரிடம் இருந்து விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பிரபல நடிகை குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் விஷ்வதுளசி. மம்முட்டி, நந்திதா தாஸ் இணைந்து நடித்த இப்படத்தில் இளம் வயது நந்திதா தாஸ் வேடத்தில் அம்பலி தேவி என்கிற மலையாள நடிகை நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், உடன் நடித்த ஆதித்யன் ஜெயன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் ஆதித்யனிடம் இருந்து விவகாரத்து கோரி அம்பலி தேவி வழக்கு முறையிட்டுள்ளார். இதற்கிடையில் ஆதித்தியன் ஜெயன் மீது நடிகை அம்பலிதேவி குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்துள்ளார். 

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை அளித்துள்ள புகார் கேரளாவையே உலுக்கியுள்ளது. இதையடுத்து ஆதித்தியன் ஜெயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

From Around the web