ஹீரோயின் ஆகிறார் பிரபல நடிகையின் மகள்..!  யார் தெரிகிறதா ?

 
1

1995ம் ஆண்டு விஜய் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு சில படங்களில் நடித்தார். பல ஆண்டுகள் கழித்து தனது தந்தை மற்றும் தம்பியுடனான பிரச்னையால் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.

இவரது சர்ச்சை நிறைந்த குடும்ப விசயங்களை வெளியில் சொல்லி தனக்கு தானே பல அவமானங்களைத் தேடிக் கொண்டார். பின் அதை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவரது வில்லத்தனத்தை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். பலரும் வெறுக்க ஆரம்பித்ததால் இவரை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. பின்னர் குக் வித் கோமாளி, சின்னத்திரை, யூடியூம் என அப்படியே பிக்அப் ஆகி இப்போது கொஞ்சம் பிரபலமாக இருந்து வருகிறார்.

இவரது மகளுக்கு 18 வயது நிறைவடைந்துள்ள நிலையில், அவரை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருப்பதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.

வனிதாவின் மகள் ஜோவிகா விரைவில் திரையில் தோன்ற இருக்கிறார். அவரை வைத்து பெரிய திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் வனிதா. கதைகள் கேட்டு வரும் வனிதா நல்ல புதுமுக இயக்குநரை வைத்தே தனது மகளை அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.

From Around the web