ஜேசன் சஞ்சய் திரைப்படத்தில் ஹீரோயினாக பிரபல நடிகையின் மகள்..?

 
1

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய், 1984-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது கதாநாயகனாக 66 படங்கள் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தகவல் படி இந்தியாவில் 100 பிரலங்கள் பட்டியலில் 7 முறை இடம் பிடித்தவர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Vijay - Sanjay

இதனிடையே நடிகர் விஜய், சங்கீதாவை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் 2005-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். 22 வயதாகும் சஞ்சய், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் திரைப்பட கலையை பயின்று வருகிறார். விஜய்யின் மகளான திவ்யா சாஷாவிற்கு 17 வயதாகிறது.

இந்த நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய், தற்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை தேவயானியின் மகள் இனியா சஞ்சய்-க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Inya

இந்த திரைப்படம் கடந்த 1999-ம் ஆண்டு தேவயானியின் கணவர் ராஜகுமாரின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நீ வருவாய் என என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்திருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் சஞ்சய் நடிக்கும் படமாக தயாரிக்கப்படவுள்ளது.

சஞ்சய் டைரக்சனில் ஆர்வமாக இருக்கும் நிலையில் , இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சய் இப்போது ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். விரைவில் அந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சஞ்சய் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web