சன் டிவியின் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி..!  

 
1

இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீமா பிந்து. இந்த சீரியலிலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வந்தார். ஆனால் சீரியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சீரியல் எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் கனத்த இதயத்துடன் சீரியலில் இருந்து வெளியேற முடிவு எடுத்ததாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த முடிவு யாரையாவது வருத்தப்பட செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தற்போது புதிய இலக்கியாவாக கண்மணி சீரியல் பிரபலம் ஷாம்பவி நடிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"கனத்த இதயத்துடன் இலக்கியா செட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறேன். உங்களை இந்த முடிவு பாதித்திருப்பதற்கு என் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். சீரியலையும், படத்தையும் பேலன்ஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். இது எனக்கு மட்டுமல்லாது 'இலக்கியா'வில் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும், திறமை வாய்ந்த டெக்னீஷியன்களுக்கும் பொருந்தும். இது ஒருவித பிரஷரையும், மன அழுத்தத்தையும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்படுத்துவதை நான் உணர்ந்தேன். இந்த புராஜெக்ட்டை இது சீர்குலைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிமிடம் வரை இலக்கியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தொடர் அன்பையும், ஆதரவையும் இந்தத் தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து கொடுங்கள். என்னைப் புரிந்து கொண்டமைக்கும் என்னுடைய முடிவுக்குப் பக்கபலமாக என்னுடன் இருப்பதற்கும் நன்றி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

1

From Around the web