பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?? 

 
1
2011-ம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நித்யா மேனன். இதையடுத்து சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார் இதனால் இவருக்கு மிக பெரிய மார்க்கெட் உருவாகியது.

இதையடுத்து உடல் எடை கூடியதால் நடிகை நித்யா மேனனுக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்த நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷுக்கு ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது…

இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.அப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகை நித்யாமேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன இவரை போல தான் பெண் வேண்டும் என பலரும் சொல்ல ஆரம்பித்தனர்..

நடிகை நித்யா மேனன் தமிழில் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். அண்மையில் இப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. இந்த நிலையில், நடிகை நித்யா மேனனின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதன்படி நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவர் தனது பள்ளிப்பருவ நண்பரை காதலித்து வருவதாகவும் அவரும் சினிமா துறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது அதனால் அவருடன் விரைவில் திருமணம் நடக்கலாம் என சொல்லப்படுகிறது…

From Around the web