பிக்பாஸ் தமிழ் புதிய சீசனில் பங்கேற்கும் பிரபல நடிகை- ட்விட்டரில் அறிவிப்பு..!

 
பிக்பாஸ் தமிழ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் புதிய சீசனில் பிரபல நடிகை போட்டியிடுவது குறித்து அவரே சமூகவலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழில் 2007-ம் ஆண்டு வெளியான சேவல் படம் மூலம் சினிமாவில் கால்பதிதவர் பூனம் பாஜ்வா. அதை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடிப்பில் உருவான குப்பத்து ராஜா படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியிடுவதை நடிகை பூனம் பாஜ்வா ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். பிக்பாஸை நோக்கி நான் வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை ஒளிப்பரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன்களில் போட்டியாளர்கள் விபரம் சீக்ரெட்டாக வைத்திருப்பது தான் வழக்கம். அந்த வகையில் புதிய சீசனில் பங்கேற்பதை போட்டியாளர் ஒருவர் ட்விட்டர் மூலம் உறுதி செய்வது இதுவே முதல்முறை. 

From Around the web