ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடி சேரும் பிர்பல நடிகை..!

 
அதுல்யா ரவி மற்றும் ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கெடுத்து வெற்றி பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் சிந்து சமவெளி, அரிது அரிது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண். எனினும், பிக்பாஸ் முதல் சீசன் தான் அவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அதற்கு பிறகு அவருடைய மார்கெட் உச்சம் தொட்டது.

அதை தொடர்ந்து அவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட்ட ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகின. இதனால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப்பெண்ணே படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இளன் என்பவருடைய இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வந்த ‘ஸ்டார்’ படம் டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக ‘பியார் பிரேமா காதல்’ நாயகி அதுல்யா ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

From Around the web