”எதிர்பார்த்த வசூலை பெறாத மாஸ்டர்” வெட்ட வெளிச்சமாக்கிய பிரபல பத்திரிக்கை..!!

 
”எதிர்பார்த்த வசூலை பெறாத மாஸ்டர்” வெட்ட வெளிச்சமாக்கிய பிரபல பத்திரிக்கை..!!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரூ. 200 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் வெளியிட்ட தகவலை மறுத்து உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளது பிரபல பத்திரிக்கை ஒன்று.

இந்தாண்டு பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம்  உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து விட்டதாக தளபதி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இதுமட்டுமின்றி பாகுபலி மற்றும் பிகில் படங்களின் வசூலை வெறும் 20 நாட்களில் இந்த படம் முறியடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் எக்ஸ்பி பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள், படத்தின் முதல் நாள் வசூலை மட்டும் தான் வெளியிட்டனர்.

ஆனால் உண்மையில் மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 70 கோடி மட்டும் தான் வசூலித்துள்ளதாக பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை கூட மாஸ்டர் முறியடிக்கவில்லை என்பது அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அஜித் ரசிகர்களுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிட்டது. உடனடியாக செய்திய வழங்கிய பத்திரிக்கையின் புகைப்படத்தை பதிவிட்டு சமூகவலைதளங்களில் வைரல் செய்கின்றனர் அஜித் ரசிகர்கள். இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருக்கும் சமூகவலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. 


 

From Around the web