துப்பாக்கி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..! 

 
1

லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாளை 5 ஆம் தேதி லியோ படத்தின் ட்ரைலர் ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக வெளியான சஞ்சய் தத், அர்ஜூன் போன்றவர்களின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் அதிரடியாக அமைந்தன. அந்த வகையில் படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி68 படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கியுள்ளது. இந்த பாடல் காட்சிக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் கொரியோகிராப் செய்யவுள்ளார். மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ் போன்றவர்கள் படத்தில் இணைந்துள்ளனர். இதில் புதிய இணைப்பாக மலையாள நடிகர் ஜெயராமும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயராம் நடித்திருந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதேபோல ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த மைக் மோகன், தற்போது விஜய் படத்தில் இணைந்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் அவருக்கு மிகச்சிறப்பான கேரக்டர் என்றும், விஜய்யுடன் படம் முழுக்க அவர் பயணிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பிரியங்கா மோகன் படத்தில் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் அவரும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் லைலா, விஜய்யுடன் முதல்முறையாக இணைந்துள்ளார். படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா,அபர்ணா தாஸ் போன்றவர்களும் இணைந்துள்ளனர்.


 

From Around the web