பிரபல பின்னணி பாடகி ஐசியூவில் அனுமதி..!!

 
1

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தி படங்களிலும் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட பிராந்திய இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு, தாதாசாகேப் பால்கே விருதுகள், பாரத் ரத்னா, மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

கடந்த செப்டம்பர் மாதம் தான் இவர் தனது 91 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

From Around the web