பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல சீரியல் நடிகர்- இப்போது வெளியான சீக்ரெட்..!

 
பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல சீரியல் நடிகர்- இப்போது வெளியான சீக்ரெட்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவருமான அம்ஜத் கான், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது. 

நயன்தாரா, ஆரி இணைந்து நடித்த ‘மாயா’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அம்ஜத் கான். அதை தொடர்ந்து பல்வேறு வலை தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்ட ‘ஆயுத எழுத்து’ தொடரில் முதலில் கதாநாயகனாக அம்ஜத் கான் நடித்தார். அதன்மூலம் தமிழக ரசிகர்கள் பலரிடம் அவர் பிரபலமானார். பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த தொடரில் நடிக்காமல் விலகினார். அதை தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராம் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். 

இந்நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் அம்ஜத் கான் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருந்தவாறு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் அப்போது என்ன படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.

தற்போது அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சமூகவலைதளத்தில் அவரை பலரும் டேக் செய்து , பொன்னியின் செல்வன் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என அம்ஜத் கானை கேட்டு வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிப்பதற்காகவே சுமார் ஒரு வருடமாக அவர் தயாராகி வந்துள்ளார். நீளமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி செய்து உடம்பை ஏற்றியுள்ளார். இந்த தோற்றங்களை வைத்து பார்க்கும் போது படத்தில் முக்கிய போர் வீரன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web