தெலுங்கில் ரீமேக் ஆகப்போகும் பிரபல சீரியல்..!

 
1

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர் 2, மகாநதி, ஆஹா கல்யாணம் போன்ற பல ஹிட் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் நிலையில் இருந்து வருகின்றது. அதேபோல பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் தற்போது படிப்படியாக முன்னுக்கு வந்து கொண்டுள்ளது.

சிறகடிக்க ஆசை  சீரியலுக்கு தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றுமொரு ஒரு சீரியலும் தெலுங்கில் ரீமேக்  செய்யப்பட உள்ளதாம்.

அதாவது பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் தற்போது தெலுங்கில் Illu Illalu Pillalu என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளதென தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதேவேளை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முதலாவது பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்தே தற்போது இரண்டாவது பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

From Around the web