குக் வித் கோமாளி 2-க்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி..!

 
குக் வித் கோமாளி 2-க்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவி-யில் ஹிட்டடித்த மற்றொரு பிரபல நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிப்பரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி சீசன் 2’ மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து ஏற்கனவே ஒளிப்பரப்பான ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியின் சீசன் 3 மீண்டும் தொடங்கவுள்ளது.

தற்போது அந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மா.க.ப. ஆனந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். 

அதேபோல பல்வேறு பிரபலமான புதிய போட்டியாளர்கள் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். சரத் ராஜ் - கிருத்திகா சரத், கானா சுதாகர் மற்றும் அவருடைய மனைவி, மைனா நந்தினி மற்றும் யோகேஷ், படவா கோபி மற்றும் ஹரிதா, ராஜ் மோகன் மற்றும் அவருடைய மனைவி, பாடகர் வேல்முருகன் - கலா, தீபா மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்ட பல நட்சத்திர தம்பதிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
 

From Around the web